#BREAKING || ’குழந்தை திருமண தடுப்பு மசோதா 2021’ மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.!  - Seithipunal
Seithipunal


பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் ’குழந்தை திருமண தடுப்பு மசோதா 2021’ மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். 

இது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வந்த நிலையில், பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கான மசோதாவை தாக்கல் செய்வதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 

மேலும், பெண்களின் திருமண வயது சட்ட மசோதா நிகழ் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு இதனை தாக்கல் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த மசோதா நிறைவேறும் பட்சத்தில், குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும்.

இந்நிலையில், சற்றுமுன் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் ’குழந்தை திருமண தடுப்பு மசோதா 2021’ மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி இந்த ’குழந்தை திருமண தடுப்பு மசோதா 2021’ மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Marriage Age Bill SmritiIrani Lok Sabha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->