உட்கட்சி பூசலால்... விசிக கட்சியினர் அடிதடி.?! சாதிய மோதலை உருவாக்கிய மர்ம நபர்கள்.!
Mayiladudurai Vck makes violence
இன்று சட்டமேதை அம்பேத்கரின் 65வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை பட்டவர்த்தி கிராம பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரான ஈழவளவன் என்பவர் தலைமையில் புதிதாக அம்பேத்கரின் உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மற்றொரு பிரிவினர் அம்பேத்கர் சிலை வைத்துள்ளதால் ஜாதி மோதல் ஏற்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் முன்னெச்சரிக்கையாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பின்னர் ஈழவளவன் அப்பகுதிக்கு வருகை புரிந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்பொழுது மர்ம நபர்கள் ஈழவளவன் மற்றும் அவருடன் வந்தவர் மீது கற்களை எறிந்த தாக கூறப்படுகிறது.
பின்னர் போலீசார் தடியடி நடத்தியதில் பிரச்சனை செய்தவர்கள் கலைந்து ஓடினர். அப்பகுதியில் கலவரம் ஏற்படாத வகையில் டாஸ்மாக் கடை மற்றும் பிற கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், விடுதலை சிறுத்தை கட்சிக்குள் மயிலாடுதுறை பகுதியில் உட்கட்சி பூசல் இருப்பதாகவும், இதன் காரணமாக விசிக கட்சியின் மற்றொரு தரப்பினர் ஈழவளவன் மீது தாக்குதல் நடத்திவிட்டு மற்றொரு சமூகத்தின் மீது பழி போடுவதாகவும் கூறப்படுகிறது.
English Summary
Mayiladudurai Vck makes violence