#விழுப்புரம் || உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா - பாமக எம்எல்ஏ., சி சிவகுமார்.! - Seithipunal
Seithipunal


மயிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவியூர் பகுதியில் தரைமட்ட பலத்துக்கு மாற்றாக உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், அடிக்கல் நாட்டி அந்த சட்டமன்ற தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் சி சிவகுமார் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்.

"விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்ற தொகுதி வல்லம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அவியூர் கிராம பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அவியூர் கிராமத்தில் அமைந்துள்ள தரைமட்ட பாலத்தை அகற்றி உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு 5.கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

 

மாண்புமிகு சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்களும் மற்றும்  ஒன்றியக்குழு பெருந்தலைவர் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்."

இவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் சி சிவகுமார் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mayilam aviyur over bridge


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->