மேயர் பிரியா என் மகள் மாதிரி., செய்தியாளர் சந்திப்பில் என்ன நடந்தது? அமைச்சர் நேரு விளக்கம்.! - Seithipunal
Seithipunal


சென்னை 383-வது தினம் நேற்று வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. சென்னை தினத்தை முன்னிட்டு மேயர் பிரியா, அமைச்சர் கேஎன் நேரு நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, மேயர் பிரியா 'ஏம்மா, பேசுமா', 'நிப்பியாம்மா' என்று அமைச்சர் ஒருமையில் பேசியது சர்ச்சையானது. மேலும் இதுகுறித்த காணொளியும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டது.

குறிப்பாக, மேயர் பிரியா பட்டியலினப் பெண் என்பதால் திமுக அவமதிக்கிறது, இது சாதிய தீண்டாமை, ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றெல்லாம் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், பிரபல வார நாளிதழ் ஒன்றிக்கு அமைச்சர் கே.என் நேரு அளித்துள்ள பேட்டியில், "பெண்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி திமுகதான். தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சி மேயர்களில் 11 மாநகராட்சியை பெண்களுக்கு வழங்கி இருக்கிறோம். 

மேயர் பிரியா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்க முடியாது என்று தெரிவித்ததால், அவரை. 'நின்று பேட்டி கொடும்மா' என்று சொன்னேன். 

பின்னர், அவருக்கு என் இருக்கையை கொடுத்து அவரின் அருகிலேயே அமர்ந்து கொண்டேன். மேயரை 'வாம்மா, போம்மா' என்று நான் அழைப்பது மகள் போன்ற அர்த்தத்தில். என் மகள் மாதிரி அவர். இதில், ஆணாதிக்கம், சாதி பாகுபாடு எதுவும் இல்லை" என்று அமைச்சர் அந்த வார நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayor Priya Minister nehru press meet issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->