காவிரி படுக்கை அவலத்திற்கு மேகதாது திட்டம் தான் நிரந்தர தீர்வு.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில அரசின் நீர்வளத் திட்டங்கள் குறித்து பொய்யான தகவல்களை அம்மாநில முதலமைச்சர் பரப்புவதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் குற்றம் சாட்டி இருந்த நிலையில் அதற்கு சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார்.

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் கர்நாடகாவில் புதிய அணை கட்டுவது தொடர்பாக நீர் பங்கீடு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதத்திற்காக பட்டியலிடப்படும்.

ஆனால் இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கவில்லை என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் "காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பட்டியலிடுவது மட்டும்தான் மதிய நீர்வளத்துறை அமைச்சருக்கும் பிரதமருக்கும் உள்ள வேலையா? 

திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் மத்திய நீர்வளத் துறை அமைச்சருக்கும் பிரதமருக்கும் உள்ளது. மேகதாது விவகாரத்தை செயல்படுத்துவதில் பிரதமரும் மத்திய அமைச்சரும் தோற்றுவிட்டனர் என கர்நாடக மக்கள் கருதுவது தவறா?

காவிரி படுக்கையின் அவல நிலையை போக்க நிரந்தர தீர்வு மேகதாது திட்டம் செயல்படுத்துவது மட்டுமே. மேகதாது திட்டத்தை காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர்வளத்துறை ஆணையம் பரிசீலித்து தேவையான அனுமதி மற்றும் ஒப்புதல்களை வழங்குவதன் மூலம் மட்டுமே பெங்களூர் மற்றும் அதனை சுற்றியுள்ள நகர் மக்கள் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும்" என பதிலடி கொடுத்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meghadatu project is permanent solution to Cauvery basin woes


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->