#Breaking | கடைசியில் அமைச்சருக்கே மர்ம காய்ச்சலா? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பில் மகேஸ்!
Minister anbil Makesh Admit in hospital
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, காய்ச்சல் காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
கடந்த 7 தினங்களுக்கு முன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழகத்தில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை" என்று தெரிவித்துருந்தார்.
மேலும் அவரின் பேட்டியில், "தமிழகம் முழுவதும் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. ஒரு பகுதியில் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருக்கிறதோ அங்கு மருத்துவ முகாம்கள் நடத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை என்ன வழிமுறை வெளியிட்டு இருக்கிறார்களோ, அந்த அடிப்படியில் தான் பள்ளிக்கல்வித்துறையும் செயல்பட்டு வருகிறது.
இந்த காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. எனவே, பள்ளிகளுக்கு விடுமுறை விட அவசியம் இல்லை. இருப்பினும் சுகாதாரத்துறை என்ன கூறுகிறார்களோ அதை ஏற்று நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
English Summary
Minister anbil Makesh Admit in hospital