அது உண்மைதான்! ஆனால், நீங்க தூங்கிட்டிங்க! பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்!
Minister EV Velu reply to Edappadi Palaniswami DMK kanniyakumari
இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கையில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக அமைச்சர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக முயற்சித்து வருகிறார்கள்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கை உயர் நீதிமன்றமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையிலும் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அரசு திமுக அரசு.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. புதுக்கோட்டையில் பாலியல் வழக்கில் சிக்கிய திமுக நிர்வாகிக்கு அமைச்சர் ரகுபதி அடைக்கலம் கொடுக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் செவிலியர் புகார் அளித்து பல நாட்கள் ஆகியும் இதுவரை அந்த திமுக நிர்வாகி மீது FIR பதிவு செய்யவில்லை.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்கும் திட்டம் 2018ம் ஆண்டு அஇஅதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கன்னியாகுமரியில் திறக்கப்பட்ட கண்ணாடி பாலம் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்று பேசிய எடப்பாடி பழனிச்சாமிக்கு, அமைச்சர் அமைச்சர் எ.வ.வேலு பதில் கொடுத்துள்ளார்.
அதில், "கண்ணாடி பாலம் திட்டம் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின் தான், டெண்டர் விடப்பட்டு கண்ணாடி பாலம் திறக்கப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்தாமல் தூங்கிவிட்டு, தற்போது அதிமுக கொண்டுவந்தது என்று கூறுவது நியாயமல்ல" என்று அமைக்கிற ஹெரிவித்துள்ளார்.
English Summary
Minister EV Velu reply to Edappadi Palaniswami DMK kanniyakumari