தமிழகத்தில் இந்த வருடம் நீட் தேர்வு உண்டு., கண் அசைத்த திமுக அமைச்சர்.!
Minister Ma SubramaniaN Say About NEET 2022
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி கிங் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய அமைச்சர் மா சுப்பிரமணியன், அங்கிருந்த சுகாதாரப் பணியாளர்களுக்கு புத்தாடைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்ரமணியம் தெரிவிக்கையில்,
"மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மருத்துவமனை கட்டுமான பணிகள் உடனடியாக தொடங்கவும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி அமைக்கவும், தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்கவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் தமிழக அரசு சார்பாக மனு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சிகள் நிறுத்தப்படாது. நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெற தொடர்ந்து முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.
பொங்கல் விடுமுறை காரணமாக இந்த வாரம் சனிக்கிழமை சனி, ஞாயிறு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படாது. தற்போது வரை தடுப்பூசி முகாம்கள் மூலமாக 3 கோடியே 22 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 60 ஆயிரத்து 51 பேருக்கு பூஸ்டர் தடுப்பு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு 75% தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது" என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Ma SubramaniaN Say About NEET 2022