பூத கண்ணாடி வைத்து பார்க்க முடியாது; ஜாபர் சாதிக் உடன் தொடர் இல்லை; - கொந்தளிக்கும் திமுக அமைச்சர்.!! - Seithipunal
Seithipunal


திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் வழக்கில் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் திமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கும் மு.க ஸ்டாலின் குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி "பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை அணிதிரட்டுவதில் முக்கிய பங்காற்றிய திமுகவை தேர்தல் களத்தில் கலங்கப்படுத்த வேண்டும் என்று பாஜக செய்யும் அரசியல் ஈடுபடாது. 

வருமான வரி துறை, அமலாக்கத் துறையை பயன்படுத்திய பாஜக அரசு தற்போது போதை பொருள் தடுப்பு பிரிவையும் பயன்படுத்துகிறது. அதற்கு அதிமுகவும் துதி பாடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. திமுகவை கழக படுத்த வேண்டும் என்ற பாஜகவின் அரசியல் இங்கு எடுபடாது.

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் முழுமையாக புலன் விசாரணை நடத்தாமல் செய்தியாளர்களை சந்திக்கிறார். திமுகவில் இரண்டு கோடி தொண்டர்கள் இருக்கின்றனர் அவர்கள் அனைவரையும் சோதனை செய்து கட்சியில் சேர்க்க முடியாது.

 

திமுக நிர்வாகிகள்  மீது குற்றம் சாட்டு எழுந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஜாபர் சாதிக் போன்றவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். போதை பொருளுக்கு முன்மாதிரியாக விளங்குவது குஜராத் மாநிலம் தான். தேர்தல் வரும் நேரத்தில்ஏதாவது ஒரு பொய்யான குற்றச்சாட்டை திமுக மீது சுமத்தி விட முடியாதா என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசுக்கு தமிழக மக்கள் ஒன்றும் முட்டாள் இல்லை என்பதை கூறிக் கொள்கிறேன். 

திமுக என்றைக்கும் சட்டவிரோத நடைமுறைகளில் ஈடுபடாது அதற்கு துணை நின்றவர்களையும் நாங்கள் வைத்துக் கொள்ள மாட்டோம் என்பதையும் உறுதிப்பட தெரிவிக்கிறோம். ஜாபர் சாதிக்கை தமிழ்நாட்டில் பிடித்தார்களா?  இல்லையே..  டெல்லியில் வேறு மாநிலத்தில் இருந்து தான் பிடித்தார்கள். தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டத்திற்கு என்றைக்கும் நாங்கள் உறுதுணையாக இருக்க மாட்டோம்" என அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது அரசியல் நடவடிக்கையா? இல்ல தேர்தல் நேரத்தில் கைது செய்யப்பட்டது அரசியல் நடவடிக்கையா? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி "கைது முன்பே நடந்திருக்க வேண்டும்.

ஆனால் தேர்தல் நேரத்தில் கைது செய்து திமுக மீது பழி போடலாம் என தப்பு கணக்கு போட்டார்கள். ஆனால் நாங்கள் உடனடியாக அவரை இயக்கத்தை விட்டே நீக்கி விட்டோம். அவருக்கும் எங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் எல்லாம் அதிமுகவிலும்,  பாஜகவிலும் இருக்கிறார்கள்.

இந்த விவகாரம் எங்கள் கவனத்திற்கு வந்தவுடன் அவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட விட்டார். இரண்டு கோடி உறுப்பினர்களில் ஒவ்வொருவரையும் பூதக்கண்ணாடி வைத்து எங்களால் பார்க்க முடியாது. தகவல் கிடைத்தவுடன் அவரை திமுகவிலிருந்து விட்டோம் என அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister raghupathi said DMK not connected with jaffar Sadiq


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->