மீசையை முறுக்குனா பயந்துடுவோமா? - கொந்தளிக்கும் அமைச்சர் ரோஜா.! - Seithipunal
Seithipunal


மீசையை முறுக்குனா பயந்துடுவோமா? - கொந்தளிக்கும் அமைச்சர் ரோஜா.!

ஆந்திரா மாநிலத்தில் நேற்று சட்டமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு, அக்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டு அமளியை ஏற்படுத்தினர். 

அப்போது தெலுங்கு தேசம் எம்எல்ஏவும், பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா, சட்டமன்றத்தில் தொடையைத் தட்டி மீசையை முறுக்கி ஆக்ரோஷமாக பேசியுள்ளார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா, தெலுங்கு தேசம் கட்சியில் 23 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் தாங்கள் 151 பேர் இருக்கிறோம். 

எங்களை மதிக்கவில்லை என்றால் உங்கள் நிலை என்னவாகும்? என்று யோசியுங்கள். நடிகர் பாலகிருஷ்ணா மீசையை முறுக்கினால் அதைக் கண்டு பயப்பட மாட்டோம் என்றுத் தெரிவித்துள்ளார். 

இரண்டு முறை எம்எல்ஏவான பாலகிருஷ்ணா இதுவரை தொகுதி மக்களுக்காக எதையும் பேசியதில்லை. பெண்களை இழிவாக பேசும் வழக்கம் கொண்டவர்" என்று விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister roja speech about actor balakrishnan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->