வேறு வழியில்லை, நிலம் எடுத்துதான் ஆகவேண்டும் - மக்களின் கருத்தும் இதுதான் - அமைச்சர் அதிரடி பேட்டி.!
minister say about Parandur new airport
சென்னையின் இரண்டாவது விமானநிலையம் பரந்தூர் அருகே அமைய உள்ளது. இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது,
"காஞ்சிபுரம், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க, அரசு சார்பில் நிலங்கள் எடுக்கும் முதல்கட்ட பணியில் இறங்கியுள்ளோம். இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13 கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள், மற்றும் விவசாயிகளை நேரடியாக அழைத்து பேசி இருக்கிறோம்.
இந்த கருத்துகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையானவர்களின் கருத்து என்னவெனில், 'நிலத்தை எடுக்குகிறீர்களே, எங்களுக்கு அதிகமான தொகை தேவை, நிலம் கொடுக்கிற எங்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளனர்.
விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் இந்த திட்டத்தை தொடங்க வேண்டும் என்பதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.
இதுபோன்ற வளர்ச்சி திட்டங்களுக்கு விவசாய நிலங்களை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் கட்டுப்பாடு, 2029 ஆம் ஆண்டுக்குமேல் செயல்பட முடியாத நிலையில் உள்ளது.
புதிய விமான நிலையத்துக்கு பரந்தூரை முதலில் தேர்வு செய்யவில்லை. முன்னதாக 11 இடங்களைப் பார்த்தோம். அதில், இறுதியாக படாளம், பன்னூர், திருப்போரூர் மற்றும் பரந்தூர் இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
படாளம், திருப்போரூர் அருகே கல்பாக்கம் அனல்மின் நிலையம் உள்ளது. பன்னூரில் அதிக குடியிருப்புகள் உள்ளன. இதனால், பரந்தூரில் அமைக்க முடிவு செய்து, அதற்கான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்து உள்ளது" என்று அமைச்சர் வேலு தெரிவித்தார்.
English Summary
minister say about Parandur new airport