யார் அவர்கள்? வார் ரூமை சேர்ந்தவர்களா? லஞ்சம் வாங்கிய அண்ணாமலையில்! அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி!
Minister Senthil Balaji Say about Annamalai DMK Files
அண்ணாமலையின் ரபேல் வாட்ச் பில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்று, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இன்று காலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக சொத்து பட்டியல், ஊழல் குறித்தும், ரபேல் வாட்ச் பில் குறித்தும் விளக்கமளித்து இருந்து இருந்தார்.
இதுகுறித்து இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவிக்கையில், "அண்ணாமலையின் ரபேல் கடிகார கடிகாரத்திற்கான ரசீது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.
நான்கரை லட்சம் ரூபாய்க்கு கேரளாவை சேர்ந்தவர் வாட்சை வாங்கி உள்ளார். அந்த வாட்ச்சை அண்ணாமலை இடம் அவர் மூன்று மாதம் கழித்து மூன்று லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறாராம்.
ஒரு அரிதான பொருள், அனைவருக்கும் கிடைக்க முடியாத ஒரு பொருள், காலம் செல்ல செல்ல அதன் விலை மதிப்பு கூடத்தான் செய்யும். ஆனால் எப்படி இரண்டு, மூன்று மாதத்தில் அந்த அரிய பொருளான் வாட்சை 2 லட்சம் குறைவாக எப்படி கொடுக்க முடியும்? அப்படி வாய்ப்பு உள்ளதா?
அந்த விற்பனையான வாட்ச்-ன் எண்ணிக்கையில் 149 என்கிறார், பிறகு 147 என்கிறார். அதில் முரண்பாடுகள் உள்ளது. நானாக இதனை கேட்கவில்லை. எல்லோரும் கேட்பதை தான் நான் கேட்கிறேன்.
ஒரு பொய்யை மறைப்பதற்கு, தான் வாங்கிய ஒரு லஞ்சத்தை மறைப்பதற்கு, நூறு, ஆயிரம் பொய்கள் அண்ணாமலை சொல்கிறார். பேசாமல் அண்ணாமலை உண்மையை ஒற்றுக்கொள்ள வேண்டியதுதானே! என்னிடம் பில் இல்லை, வாட்ச் கொடுத்தார்கள், பரிசு கொடுத்தார்கள் என்று சொல்ல வேண்டியது தானே?
மாதந்தோறும் அண்ணாமலைக்கு யார் வீட்டு வாடகை கொடுப்பார்கள்? அவர்கள் யார்? வார் ரூமை சேர்ந்தவர்களா? நண்பர் என்று சொல்கிறாரே! அவர்கள் யார்? பதில் அளிக்க அண்ணாமலை வேண்டும். அண்ணாமலை வெளியிட்டுள்ள திமுக சொத்து பட்டியல், ஊழல் புகார்கள் அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
English Summary
Minister Senthil Balaji Say about Annamalai DMK Files