இன்று துணை முதலமைச்சராக பதவியேற்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் முதமைச்சராக உள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று கடந்த சில மாதங்களாகவே கூறப்பட்டு வந்தது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி ஒன்றில், துணை முதலமைச்சராவது குறித்து, முதலமைச்சர் முடிவு செய்வார் என்று தெரிவித்து இருந்தார்.

33 அமைச்சர்களுடன் தமிழக அமைச்சரவை இயங்கி வரும் நிலையில், தற்போது தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அந்தவகையில் தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநர் மாளிகைக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து, தமிழக துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்பார் என்று ஆளுநர் மளிகை நேற்று அறிக்கை வெளியிட்டது.  அதன் படி, துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்கிறார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Udayanidhi Stalin will be sworn in as Deputy Chief Minister today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->