மதுரை வந்த முதல்வர்.. அண்ணன் மு.க.அழகிரியுடன் சந்திப்பு.?! செல்போனில் உரையாடல்.!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு பணி மேற்கொள்ளும் விதமாக "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த ஜனவரி மாதம் முதல் செயல்படுத்தி வருகிறார். 

இந்த திட்டத்தின் படி முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அந்த மாவட்டத்தில் உள்ள அடிப்படை வசதிகள், நலத்திட்டங்கள் போன்றவை குறித்து ஆய்வு மேற்கொண்டு அந்த மாவட்டத்திற்கான நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றார்.  

அந்த வகையில், கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து மார்ச் 5ஆம் தேதி மதுரைக்கு கள ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கடுத்து தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் சட்ட ஒழுங்கு குறித்து ஆலோசித்தார். 

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தனது சகோதரனான மு.க அழகிரியை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். ஸ்டாலின் மதுரையில் இருப்பதால் மு.க அழகிரியை நேரில் சந்திக்க போவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா அழகிரியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk Stalin may Meet Mk alagiri Today 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->