பி.டி.ஆர் ஆடியோ விவகாரம்.. மட்டமான அரசியலுக்கான விளம்பரம்.. முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலடி..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் உங்களின் ஒருவன் பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள உங்களின் ஒருவன் பதில் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் மருமகன் சபரீசன் 30,000 கோடி ரூபாய் சொத்துக் குவித்தது குறித்து பேசி ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து ஏன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாய் திறக்கவில்லை என எதிர்க்கட்சிகள் பல கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்த நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள உங்களின் ஒருவன் நிகழ்ச்சி காணொளியில் "நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் பெயரில் வெளியான ஆடியோ பற்றி உங்களோட கருத்து என்ன..?" என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் "இதுகுறித்து ஏற்கனவே அவர் இரண்டு முறை விரிவான விளக்கம் அளித்து விட்டார். மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக உள்ளது. இதில் இதைப் பற்றி பேசி மட்டமான அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நான் விளம்பரம் தேடித் தர விரும்பவில்லை" என காட்டமாக பதிலடி தந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin reply on PTR audio issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->