சிறுபான்மையின மக்கள் மீது பாஜகவுக்கு வன்மம்.. முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு..!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உங்களில் ஒருவன் பதில் நிகழ்ச்சியில் இன்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பாஜக ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று உள்துறை அமைச்சரே பேசி இருக்கிறாரே..? முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள ஒதுக்கீடு வழங்கிய கட்சி தலைவராக உங்கள் கருத்தை என்ன..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் "சிறுபான்மை இன சமூகத்தினர் மீதான வன்மம் தான் இதன் மூலமாக வெளிப்படுகிறது. தேர்தல் அரசியல் லாபங்களுக்காக உள்துறை அமைச்சர் இப்படி சொல்லி இருக்கிறார் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வதுதான் இந்து மக்களைப்படுத்தும் என பாஜகவின் தலைமை அவர்களாகவே கற்பனை செய்துள்ளனர்.

ஆனால் உண்மை அப்படி அல்ல. பாஜகவுக்கு வாக்களிக்காத பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் தான். ஆனால் அவர்கள் அமைதியையும் சகோதரத்துவத்தையும் விரும்புகிற மக்கள். பாஜக தன்னுடைய வெறுப்புணர்ச்சியை குறிப்பிட்ட சிலர் மீது மீது திணித்து அதுதான் ஒட்டுமொத்த மக்களின் மனநிலை என காட்ட நினைக்கிறது.

அதன் பொய்களையும் கற்பனை கதைகளையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கின்ற பரப்புரை இயந்திரமாக சமூக ஊடகங்களில் செயல்படக்கூடியவை தான் பாஜகவின் கணக்குகள். பாஜகவின் ஊது குழலாக மாறி தாங்கிப் பிடிக்கின்ற சில ஊடகங்கள். இப்படி பல காரணிகள் மூலம் தன் தன்னுடைய வெறுப்பு அரசியலை பாஜக செய்து கொண்டிருக்கிறது.

மதச்சார்பின்மையை அரசியல் நெறிமுறையாக கொண்ட நாட்டில் உள்துறை அமைச்சரை இப்படி பேசுவது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகின்ற செயல். மக்கள் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கோயபல் சொன்ன பொய்கள் நாசிகளுக்கு. ஆனால் உண்மை மக்களுக்கு. இதுதான் வரலாறு சொல்லும் பாடம்.

நாங்கள் மக்களை நம்புகிறோம். இந்திய மக்களின் மனசாட்சி என்றைக்கும் உறங்கிடாது என நாங்கள் நம்புகிறோம்." என உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin accuses BJP of being hostile to minorities


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->