வெற்றிக்கு அச்சாரமிடும் முப்பெரும் விழா! உடன்பிறப்புகளுக்கு மு.க ஸ்டாலின் அழைப்பு!
MKStalin invitation letter to DMK workers to come to Vellore
வேலூர் மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மற்றும் திமுகவின் 75வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் திமுகவின் முப்பெரும் விழாவுக்கு வருமாறு திமுக உடன் பிறப்புகளுக்கு கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள அழைப்பு மடலில் "ஜனநாயக விரோத மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை யாரும் எதிர்த்து நிற்க முடியாது என்று இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்தை பாட்னாவில் உருவாக்கிய போது ஏளனம் பேசினார்கள். 'இது போட்டோ செஷன்' என்று நகையாடியவர்களின் கண்களில் பயமாறுவதை பெங்களூரு நகரில் நடந்த இந்தியா கூட்டணியின் இரண்டாவது கூட்டத்தில் காண முடிந்தது.
இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் அறிவிக்கப்பட்ட போது பாஜக அரசின் பயத்தின் விளைவை சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு நாடகம் அம்பலப்படுத்திவிட்டது. 10 ஆண்டுகால இந்தியாவை மதத்தின் பெயரால் பாழ்படுத்தி ஒரே நாடு-ஒரே மொழி-ஒரே தேர்தல்-ஒரே உணவு என்ற சர்வாதிகாரத்தனத்தினை நிலை நிறுத்த முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணியில் இணைந்திருப்பதை அரசியல் கட்சிகள் மட்டுமல்ல இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகின்ற வாக்காளர்களும் தான்.
சென்னை, மண்ணடி பவளக்கார தெரு, ஏழாம் எண் வீட்டில் ஆலோசனை நடத்தப்பட்டு ராமாபுரம் ராபின்சன் பூங்கா பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட இயக்கம் திமுக. பவள விழாவை கொண்டாடும் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும், சமூக நீதி-மாநில உரிமை-பன்முகத்தன்மை கொண்ட வகையில் இந்திய அரசியலை தீர்மானிக்கும் இயக்கமாகவும் திகழ்கிறது.
எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு முதுகு வலையாமல், தரையில் தவழாமல் நெஞ்சின் நிமிர்த்தி நின்று, 'நான் தி.மு.க.காரன், நான் கலைஞரின் உடன்பிறப்பு' என்று கம்பீகிரமாக சொல்கின்ற துணிவு வலிமையும் கழகத்தினரின் அடையாளம். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணா கண்ட திராவிட முன்னேற்ற கழகம் தனது 75 ஆவது ஆண்டு பவள விழாவினை கொண்டாட இருக்கிறது. இதைவிட என்ன மகிழ்ச்சி நமக்கு இருக்க முடியும்?
2024 நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றிக்கு அச்சாரம் இடும் வேலூர் முப்பெரும் விழாவுக்கு கொள்கை படையாக திரண்டு வருக. கழகம் காப்போம்-மொழியை காப்போம்-மாநில உரிமை காப்போம்-மக்கள் வாழும் வகையில் நாட்டை காப்போம் என்று உறுதியை தருக. நாற்பதும் நமதே நாடும் நமதே என்ற இலக்கை அடைந்திட சூழலைக்கும் விழாவாக வேலூர் முப்பொருளும் விழா அமையட்டும் அடுத்த ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவும் கழக பவள விழா நிறைவும் வெற்றி கொண்டாட்டங்களாக மலரட்டும்" என திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகளுக்கு கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் அழைப்பு மடல் எழுதியுள்ளார்.
English Summary
MKStalin invitation letter to DMK workers to come to Vellore