"ஆட்சி அமைந்தது முதல்".. முதல்வர் கொடுத்த பதிலடி.. வீடியோ வைரல்.!! - Seithipunal
Seithipunal


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்திற்கு கூடுதலா நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக தெரிவித்திருந்தார். அதற்க்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில் "பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது நமது #DravidianModel அரசு.

ஆட்சி அமைந்தது முதல்,  மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் அளவுக்கு செலவில் மிச்சம், காலை உணவுத் திட்டம் மூலம் பணிச்சுமைக் குறைப்பு,  புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1000 ரூபாய்,  கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் - எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் நிதியினைக் கொண்டு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது #திராவிடமாடல் அரசு. இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்தது என்ன? ஒன்றிய நிதியமைச்சரின் பேச்சுக்கு விரிவான பதில் தந்திருக்கிறார் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு" என வீடியோ ஒன்றை பதிவிட்டு  நிதியமைச்சர் நிர்மலா சிதாராமனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mkstalin responce to nirmala sitharaman statement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->