மீண்டும் அமைச்சரவை மாற்றம்.. துணை முதல்வர் ஆவாரா உதயநிதி..? மு.க ஸ்டாலினின் நெத்தியடி பதில்.!! - Seithipunal
Seithipunal


திமுகவில் சேர்ந்த சில மாதங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானார். எம்எல்ஏவாக உதயநிதி தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அவருக்கு அமைச்சரவையில் இடம் தர வேண்டும் என அவருடைய ஆதரவாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றார்.

இந்த நிலையில் சமீப காலமாக சீனியர் அமைச்சர்கள் துணியில்லாமல் தனியாக டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது, ஒடிசா ரயில் விபத்தை பார்வையிட அமைச்சர் சிவசங்கர் உடன் ஒடிசா சென்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்திப்பது என திமுகவில் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என திமுக உடன்பிறப்புகள் முனுமுனுக்க தொடங்கியுள்ளனர்.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றுதான் என்றாலும் எப்போது என்பது கேள்விக்குறியாக உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க கூடும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இன்று டெல்டா பகுதிகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் செய்தியாளர் ஒருவர் தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறதா ? உதயநிதி துணை முதல்வர் ஆக்கப்படுவரா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "ஒன்றிய அமைச்சரவையில்தான் இப்போது மாற்றம் வரும் என செய்திகள் வருகின்றன" என பதில் அளித்துள்ளார். உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றதன் மூலம் அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அடுத்த ஓராண்டுக்கு தமிழக முழுவதும் கொண்டாட இருப்பதால் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin response question on Udhayanidhi deputy cm post


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->