தமிழகத்தில் இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்த ஆளுநர் முயற்சி.? அச்சத்தில் எம்.எல்.ஏ.!! - Seithipunal
Seithipunal


4 மாதங்கள் காலதாமதம் செய்து மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவி செயல்  அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது. இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்த ஆளுநர் முயலுகிறாரோ என ஐயம் ஏற்படுகிறது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வானது பழங்குடியினத்தினர், ஒடுக்கப்பட்ட வகுப்பினர், அரசுப்பள்ளிகளில் படித்தவர்கள், தமிழ்வழியில் படித்தோர், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் மருத்துவக் கல்வியில் சேரும் கனவை சீர்குலைக்கிறது என்று அதற்கு விலக்கு அளிக்கக்கோரி கடந்த செப்டம்பர் மாதத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், நீட் மசோதாவை ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல் தமிழக ஆளுநர் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்கள் காலம் தாழ்த்தி வந்தார்.

நேற்றைய தினம் தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்கள் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஏன் விலக்கு அளிக்கவில்லை? என்ற கேள்வியை கேட்டு, விலக்கு அளிக்காததற்கு கண்டனமும் தெரிவித்திருந்தார். நீட் மசோதாவை ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாகவும் நாடாளுமன்றத்தில் புகார் எழுப்பப்பட்டது.

இத்தேர்வினால் ஏற்படும் சாதக, பாதகங்களை கண்டறியதான் தமிழக அரசு ஒய்வுபெற்ற நீதியரசர் திரு.ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் கமிட்டி அமைத்தது. ஏ.கே.ராஜன் கமிட்டியினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனைத்துத் தரப்பினரையும் அணுகி, இத்தேர்வினால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களையும், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் ஒரு தரவாக அரசுக்கு அளித்தது. அந்தப் பரிந்துரைகளை ஏற்றுத்தான் நீட் விலக்கு மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தமிழக ஆளுநர் அவர்கள், ஏ.கே.ராஜன் கமிட்டி கொடுத்த பரிந்துரைகளை படித்து பார்த்தாரா? என்பது குறித்து நமக்கு தெரியவில்லை. மேலும், மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறும், விரிவான விளக்கம் தேவையென்றும், நீட்தேர்வால் சமூகநீதி எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று சிஎம்சி வழக்கை ஒன்றை ஆளுநர் சுட்டிக்காட்டி, ஒப்புதலுக்கு அனுப்பிய மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.

சமுக மற்றும் கல்வி பின்தங்கலுக்கு உள்ளான சமூகங்கள் பாதிக்கப்படவில்லை என்று முடிவிற்கு ஆளுநர் எந்த அடிப்படையில் வருகிறார். அவரிடம் அதற்கான எந்த வகையான ஆய்வறிக்கை உள்ளது. சிஎம்சி வழக்கு சிறுபான்மை நிர்வாகத்தின் உரிமைகள் சார்ந்தது. அந்த வழக்கிற்கும் மாநில அரசின் உரிமைக்கும் எந்த தொடர்பும் இல்லை .

ஏறத்தாழ 4 மாதங்கள் காலதாமதம் செய்து மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின் செயல் அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது. இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்த ஆளுநர் முயலுகிறாரோ என ஐயம் ஏற்படுகிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருக்கும் ஆளுநரின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும், கூட்டாட்சி தத்துவத்தை மதிக்காத ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mla selvaperunthagai says about neet issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->