பிரச்சாரத்தை நிறைவு செய்தார் மோடி! அடுத்து கன்னியாகுமரியில் தியானம்!!
Modi completed the campaign Next meditation at Kanyakumari
இந்தியாவில் 7ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடையுள்ள நிலையில், பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலம் ஷோஷியார்பூரில் தனது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை நிறை செய்தார்.
மக்களவை தேர்தல் அறிவித்த நாளில் இருந்து தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, மக்களவை தேர்தலுக்காக 206 பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். 80 நேர்காணல் மூலம் ஊடங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இதில் பிரதமர் மோடி நிகழ்த்திய ரோடு ஷோவும் அடங்கும்.
பஞ்சாப் மாநிலம் ஷோஷியார்பூரில் தனது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை நிறை செய்த பிரதமர் மோடி. எலிக்காப்டர் மூலம் பகவதி அம்மன் கோவிலுக்கு செல்கிறார். அதனால், பகவதி அம்மன் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்ப்பாடு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையால் பொதுமக்கள் பகவதி அம்மன் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பின்னர், அங்கியிருந்து பிரதமர் மோடி நேராக விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார். பின்னர் தியான மண்டபத்தில் அமர்ந்து ஜூன் 1 ம் தேதி பிற்பகல் 3 மணி வரை தியானம் செய்ய உள்ளார். பிரதமர் மோடி வருகை ஒட்டி , பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தபட்டுள்ளது. விவேகானந்தர் பாறைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Modi completed the campaign Next meditation at Kanyakumari