மோடி தன்னம்பிக்கையை இழந்துவிட்டார் - அகிலேஷ் யாதவ்!! - Seithipunal
Seithipunal


பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி வராது என்பதை உணர்ந்து மோடி பேச்சுகளில் தடுமாறுகிறார். மோடி தன்னம்பிக்கை இழந்து விட்டார் என அகிலேஷ் யாதவ் பேச்சு.

மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல் நிறைவடைந்துள்ளது.7ம் கட்ட இறுதி தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் நான்காம் தேதி மக்களவை தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது.

இறுதி கட்ட மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், உத்தர பிரதேசம் மாநிலம் சலேம்பூர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அகிலேஷ் யாதவ் பேசுகையில், ஜூன் நான்காம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த உடனே அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்படும். 400 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறுபவர்கள் தோற்கப் போகிறார்கள். பிரதமர் மோடி தன்னம்பிக்கையை இழந்து விட்டார். மத்தியில் பாஜக மீதும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதை உணர்த்தும் மோடி பேச்சுக்களில் தடுமாறுகிறார் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi has lost confidence Akhilesh Yadav


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->