பிரதமர் மோடி பதவியேற்பு விழா - ரஜினிகாந்துக்கு அழைப்பு.!
Modi Inauguration Ceremony
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களைக் கைப்பற்றியது. இதையடுத்து பாராளுமன்றத்தின் மைய அரங்கில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பாராளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கு அனைத்து எம்.பி.க்களும் ஆதரவு அளித்தனர். இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்த மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்தை அளித்ததுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பின்னர், ஜனாதிபதியும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், நாளை மறுநாள் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதே போல் ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவிற்கும் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Modi Inauguration Ceremony