தமிழகத்தில் முடியாட்சி வந்து விட்டது!...அரசியலில் இது நல்லதல்ல - தமிழிசை சவுந்தர்ராஜன் காட்டம்!
Monarchy has arrived in tamil nadu It is not good in politics tamilisai soundarrajan kattam
33 அமைச்சர்களுடன் தமிழக அமைச்சரவை இயங்கி வரும் நிலையில், தற்போது தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்பார் என்று ஆளுநர் மாளிகை நேற்று அறிக்கை வெளியிட்டது. அதன் படி, துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்கிறார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தந்தை முதலமைச்சர், மகன் துணை முதல் அமைச்சர் என்றால், இங்கு எங்கே ஜனநாயகம் உள்ளது என்று கேள்வி எழுப்பிய அவர், இது ஜனநாயக வழிமுறை என்று சொல்ல முடியாது என்றும், முடியாட்சியை நோக்கி திமுக எடுத்துச் சென்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் திமுக வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள் எத்தனையோ பேர் உள்ளதாக கூறிய அவர், உதயநிதியை விட மூத்த அமைச்சர்கள் பல பேர் கட்சியில் உள்ள நிலையில், அவர்களுக்கு துணை முதல் அமைச்சர் பதவி கொடுத்து இருக்கலாம் என்று கூறினார்.
பெண்களுக்கு அமைச்சரவையில் புதிதாக வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், சமூக நீதி, சம வாய்ப்பு என்று அடிக்கடி கூறுகிறீர்கள். எங்கே சென்றது சமூக நீதி என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.
மேலும் ஊழல் வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளி வந்துள்ள செந்தில் பாலாஜிக்கு அவசர அவசரமாக அமைச்சர் பதவி கொடுத்துள்ளது தவறான உதாரணம் என்றும், தமிழக அரசியலில் இது நல்லதல்ல என்று விமர்சித்தார்.
English Summary
Monarchy has arrived in tamil nadu It is not good in politics tamilisai soundarrajan kattam