தமிழ்நாட்டில் முடியாட்சி அமல்?....உதயநிதி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


33 அமைச்சர்களுடன் தமிழக அமைச்சரவை இயங்கி வரும் நிலையில், தற்போது தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்க உள்ள நிலையில், இதனையொட்டி  அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், துணை முதல்வர் என்பது பதவி அல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவேன் என்றும், என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன் என்று தெரிவித்தார்.

மக்களுக்காக உழைக்க இன்னும் அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாற்றும் மூத்த அமைச்சர்களின் வழிகாட்டுதல்படி செயல்படுவேன் என்றும், வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

மேலும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதல்படி செயல்படுவேன் என்று அவர் தெரிவித்தற்கு சமூக வலைதங்களில் பலரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  முடியாட்சியை செயல்படுத்த முயற்சிப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,  தந்தை முதலமைச்சர், மகன் துணை முதல் அமைச்சர் என்றால்,  இது ஜனநாயக வழிமுறை என்று சொல்ல முடியாது என்றும், முடியாட்சியை நோக்கி திமுக எடுத்துச் சென்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Monarchy in tamil nadu udhayanidhi sensational interview


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->