சமூக ஊடக விதிகளை கடுமையாக்க தயார், மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடுமையான சட்ட விதிகளை அமல்படுத்த வேண்டி இருக்கிறது என்றும், அதில் சமூக ஊடகங்களையும் பொறுப்பு ஏற்க வைப்பது அவசியமாகும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் நேற்று பாஜக எம்.பி. சுஷில்குமார் மோடி பேசுகையில், முஸ்லிம் பெண்களை குறி வைத்து செயல்பட்டு வரும் 'புல்லி பாய்' போன்ற செயலிகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தவறு செய்யும் சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதற்கு கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக எதிர்கட்சிகள் புகார் கூறுகின்றனர்.

ஆனால் உண்மை அதுவல்ல, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சமூக ஊடகங்களையும் பொறுப்பேற்க வைப்பது அவசியமாகும். எனவே சமூக ஊடகங்களுக்கான விதிகள் கடுமையாக்கப்பட வேண்டியிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் சமூக ஊடகங்களுக்கு மேலும் கடுமையான விதிகளை அமல்படுத்த அரசு தயாராக உள்ளது என்றும் நாட்டு மக்களுக்காக நாம் அதை செய்ய வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

More restrictions for Social Medias


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->