கமலாலயம் விரைவில் ஆளுநரின் மாளிகையாக மாறும் - எம்பி மாணிக்கம் தாக்கூர்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பாஜக மற்றும் தமிழக ஆளுநர் ரவியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அந்த வகையில் ஆளுநர் குறித்து பேசிய அவர், ஆளுநர் தனது பணியை விட பாஜகவின் மாநில தலைவர் போல் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் மாளிகையை காலி செய்து விட்டு கமலாலயம் விரைவில் அவருடைய அலுவலகமாக மாறும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளாக சுற்றாத நாடே கிடையாது. அவர் பேசாத பேச்சே கிடையாது. மோடி வெளிநாடுகளுக்கு சென்று என்ன பெற்று வந்தார் என ஆளுநர் ரவி கேட்கிறாரோ என்றே எனக்கு தோன்றுகிறது.

மேலும் குஜராத்தின் அமுல் நிறுவனம் தமிழ்நாட்டின் ஆவினை காலி செய்வதற்கும் அதன் உண்மையான வேர்களை அறுப்பதற்கும் பாஜக சதி திட்டம் தீட்டியுள்ளது. தற்போது ஆவினின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மனோ தங்கராஜ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் கடந்த 10 ஆண்டுகளாக ஆவினில் சீர்கேடு நிலவி வர அதிமுக அரசே காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MP manikkam Thakur roasted BJP and governor


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->