மதிமுக தலைவர் வைகோ மருத்துவமனையில் அனுமதி.! துரை வைகோ சொன்ன அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


மதிமுக கட்சியின் தலைவர் வைகோ நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அதில், அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு, சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இந்த தகவலை வைகோவின் மகனும், ம.தி.மு.க. கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக துரை வைகோ வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்து இருப்பதாவது:- "மதிமுக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சகோதரர் வெற்றிவேல் அவர்களின் மகள் மணவிழாவில் பங்கேற்பதற்காக இயக்கத்தந்தை தலைவர் வைகோ அவர்கள் நேற்று திருநெல்வேலி வருகை தந்தார்கள். 

எதிர்பாராவிதமாக நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இன்று காலை சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். 

சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் உடல் நலம் பெறுவார்கள். வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mtmk leader vaiko admitted hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->