பம்பரம் தான் தரல.. தீப்பெட்டியாச்சும் தாங்க - தேர்தல் அலுவலரிடம் மதிமுக கோரிக்கை,! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. அங்கு ம.தி.மு.க. வேட்பாளராக துரைவைகோ களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில், தனக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ விண்ணப்பித்தார். அதனை தேர்தல் ஆணையம் பரிசீலிக்காததால், ம.தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குறைந்தது 2 தொகுதியில் போட்டியிடாததால் பம்பர சின்னத்தை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்க முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியதை ஏற்கிறோம்.

நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடமுடியாது என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம் ம.தி.மு.க. தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் மதிமுக சார்பில், தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது. மாநிலக் கட்சியாக இருப்பதால் கேட்கும் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாளியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mtmk party ask matchbox and gas symbol for election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->