மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி போராட்டம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் வரும் ஜூலை 21ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய மின் கட்டணம் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. அதனை எதிர்த்து மின் கட்டண உயர்வை திரும்ப பெறகோரி பாமக சார்பில் நாளை ஜூலை 19ஆம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் போராட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின் இணைப்பின் 400 யூனிட் மாட்டாளர்களுக்கு மின் கட்டணம் பொருத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. வணிகப் பயன்பாட்டிற்கு 50 கிலோ வாட் மேல் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனிடையில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் வரும் ஜூலை 21 தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீரழுவு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட ஓழங்கு மற்றும் சீரழிந்து விட்டதாக நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டி வரும் நிலையில், வரும் ஜூலை 21 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Naam Tamilar Party protest announcement against electricity tariff hike


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->