#தமிழகம் | சாதிமாறி காதல்., ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்த காதல் ஜோடி.! - Seithipunal
Seithipunal


நாகா்கோவில் அருகே சாதிமாறி காதல் செய்த காதல் ஜோடி ஒன்று, ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் சிதம்பரம் நகரில் வசித்து வருபவர் அமுதா (வயது 48). இவரின் இளைய மகள் உமாகெளரி (வயது 20) பல்பொருள் அங்காடியில் பணி செய்து வந்துள்ளார்.

சம்பவம் நடந்த கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் பணிக்கு சென்ற உமாகெளரி, முன் கூட்டியே வீட்டுக்கு வந்துள்ளார். மாலை பணி முடிந்து உமா கெளரியின் சகோதரி வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது, வீட்டில் உமாகெளரியும், மருங்கூா் இசக்கியம்மன் கோயில் தெருவை சோ்ந்த கல்லூரி மாணவன் வேணுமோகனும் (வயது 20) ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து பிணமாக கிடந்துள்ளனர்.

உடனடியாக உமா கெளரியின் சகோதரி தனது தாய்க்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இருவேறு சமூகத்தை சேர்ந்த உமாகெளரி, வேணுமோகன் இருவரும் காதலித்து வந்ததாகவும், இவர்களின் காதலுக்கு எதிா்ப்பு கிளம்பியதால் மனமுடைந்த காதல்ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NagarKovil Lovers suicide in saree


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->