தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி கொள்கைக்காக இல்லை! - நயினா நாகேந்திரன்!
Nainar Nagendran said alliance only for election and not for policy
வ.உ.சிதம்பரனாரின் 86 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வ.உ.சிதம்பரமானாரின் மணிமண்டபத்தில் அவருடைய சிலைக்கு பாஜக சார்பில் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் "தனியாக தேர்தலை சந்திப்போம் என்று எந்த கட்சியாலும் சொல்ல முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு கட்சி ஆரம்பித்தால் கூட்டணி வைக்கக் கூடாது என சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். ஆனால் கூட்டணியாக இருந்தால் பலமாக இருக்கும்.
கூட்டணி என்பதை தேர்தலுக்கு மட்டுமே தவிர கொள்கை அளவில் யாரும் யாருடனும் கூட்டணி கிடையாது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. தற்போதைய சூழல் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். எனக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளது. நெல்லை தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு தந்தால் கண்டிப்பாக போட்டியிடுவேன்.
நெல்லை சட்டமன்றத் தொகுதிக்கு நான் செய்த பணிகளை நாடாளுமன்ற மன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து செய்வேன் என செய்தியாளர்களிடம் பேசினார். பாஜக யாருடன் கூட்டணி என்ற முடிவை எட்டாத நிலையில் நெல்லை தொகுதியில் போட்டியிட தயாராக உள்ளதாக பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன் அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
English Summary
Nainar Nagendran said alliance only for election and not for policy