நண்பா நீ போராட வேண்டியது கொரோனவுடன் அல்ல, உன் மனைவி அன்சிகாவுடன் தான் - அன்சிகாவின் பத்து கட்டளைகள்.,
nellai marriage cut out
நெல்லை சொக்கலிங்கபுரம் பகுதியில், திருமண தம்பதிகளை வாழ்த்தி வைக்கப்பட்ட கட்-அவுட்கள் தற்போது சமூக வலைதளங்களிலும், அந்த பகுதி வாசிகளையும் அதிகம் கவனம் ஈர்த்துள்ளது.
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற திருமணத்தில், மணமகனுக்கு மணமகள் விதித்த 10கட்டளைகள் கொண்ட கட்-அவுட், அந்தப் பகுதி மக்களையும், திருமணத்திற்கு வந்தவர்களையும் அதிகம் கவனம் எடுத்து உள்ளது.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. அதில், அன்சிகாவின் பத்து கட்டளைகள்.,
உன்னுடைய மனைவி நான். ஒரு வேறு காதலி உனக்கு இருக்கக் கூடாது.
அடுத்தவர் மனைவியை பார்த்து சிரிக்க கூடாது.
வேறு பெண்ணின் அழகு குறித்து வர்ணிக்க கூடாது.
இரவு எட்டு முப்பது மணிக்கு கிச்சன் க்ளோஸ் .
இரவு ஒன்பது முப்பது மணிக்கு பெட்ரூம் க்ளோஸ் க்ளோஸ்
தேங்காய் எண்ணெய், ஷாம்பு, சோப்பு, துண்டு சொந்தமாய் எடுத்துக்கொண்டு போய் குளிக்க வேண்டும். அதற்காக தொந்தரவு செய்யக்கூடாது.
ஹோட்டல் சாப்பாட்டை நிறுத்தி விட்டு, வீட்டில் பழைய சாப்பாடு ஆனாலும் சாப்பிடவேண்டும்.
தண்ணி அடித்தால் வீட்டிற்கு வெளியே படுத்துக் கொள்ள வேண்டும்.
சாயங்காலம் ஆறு முப்பது மணி முதல் ஒன்பது முப்பது மணி வரை சீரியல் டைம். கூப்பிட்டு தொந்தரவு செய்யக்கூடாது. பச்சைத் தண்ணீர் கூடக் கிடைக்காது.
உறக்கத்தில் குறட்டை சத்தம் போடக்கூடாது. உள்ளிட்ட பத்து கட்டளைகளை மணமகனுக்கு மணமகள் விதித்துள்ளார் என்று, அவரின் நண்பர்கள் அந்த பேனரில் எழுதியுள்ளனர்.
மேலும் ஒரு கொலைவெறி கொரோனா குரூப்ஸ் என்ற நண்பர்கள் வைத்துள்ள பேனரில்,
"வியாபாரிக்கு கொரோனா-143
நண்பா நீ போராட வேண்டியது கொரோனவுடன் அல்ல, உன் மனைவி அன்சிகாவுடன் தான்" என்று தெரிவித்துள்ளனர் .