ஹரியானாவில் அடுத்த வாரம் புதிய பாஜக அரசு!....முதலமைச்சர் இவரா?
New bjp government in haryana next week is this the chief minister
ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பாஜக 48 தொகுதிகளையும், காங்கிரஸ் 37 தொகுதிகளையும் கைப்பற்றியது.
இதன் மூலம் ஹரியானாவில் பாஜக 3-வது முறையாக தொடர் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், தற்போதைய முதலமைச்சராக உள்ள நயாப் சிங் சைனியே மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதற்கிடையே, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நயாப் சிங் சைனி சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மகத்தான வெற்றியின் பெருமை, பிரதமரின் கொள்கைகள் மற்றும் அவர் மீது மக்கள் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடே இந்த வெற்றி என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில், மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது, புதிய பா.ஜ.க. அரசின் பதவியேற்பு விழா வரும் 15-ம் தேதி பஞ்ச்குலாவில் நடைபெறும் என்றும், இதற்காக பஞ்ச்குலாவில் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். மேலும், இந்த பதவியேற்பு விழாவிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய பஞ்ச்குலா துணை கமிஷனர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநில பாஜக தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
English Summary
New bjp government in haryana next week is this the chief minister