புதிய வருமான வரி விதிப்பு! ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்..!!! - Seithipunal
Seithipunal


மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி சலுகை அளித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.மேலும் வரும்  ஏப்ரல் 1-ந் தேதி முதல் இந்த புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரி மாற்றங்கள் நடைமுறைக்கு வரும்.இதில் பழைய மற்றும் புதிய வரி விதிகளில் ஒன்றை தேர்வு செய்வது வரி செலுத்துவோரின் தனிப்பட்ட பொறுப்பாக இருக்கும்.

இருப்பினும் மத்திய அரசு புதிய வரிமுறையை ஊக்குவிப்பதற்காக ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரியில்லை என்பது உள்பட பல்வேறு சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.இதில் 2 முறையின் கீழும் வரி செலுத்துவோர் செய்ய வேண்டிய சில தகவல்கள் உள்ளன.

அவ்வகையில் வரி செலுத்துவோர் தங்கள் வங்கி கணக்கு எண்ணை தெளிவாக குறிப்பிட வேண்டும்.மேலும் சேமிப்பு கணக்குகளில் ஈட்டப்படும் வட்டியையும் குறிப்பிட வேண்டும்.மேலும் செயலற்ற வங்கி கணக்குகளை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. பணத்தை திரும்ப பெறுவதற்கு முதன்மை கணக்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதேபோல் ஷேர்மார்க் கெட்டின் பங்குகள் கூட்டாண்மை சொத்துகள் மற்றும் கடன்கள் வெளிநாட்டு சொத்துகள் அல்லது வருமானம் ஏதேனும் இருந்தால் அவற்றையும் வெளியிட வேண்டும்.பழைய வரிமுறையின் கீழ் பல்வேறு விலக்குகள் மற்றும் கழிவுகள் இருப்பதால் வரி செலுத்துவோர் கூடுதல் விவரங்களை வெளியிட வேண்டும்.

இதில்  கல்விக்கடன்,முதலீடுகள், சுகாதார காப்பீடு,  நன்கொடைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.புதிய வரிவிதிப்பு குறைந்த வரிவிகிதங்களை வழங்குகிறது. ஆனால் பெரும்பாலான விலக்குகளை அனுமதிக்காது. அடிப்படை வருமான வெளிப்படுத்துதல் மட்டுமே தேவைப்படுகிறது.

வீட்டு வாடகை, பயணப்படி போன்ற விலக்குகளுக்கான சலுகைகள் பொருந்தாததால் இது எளிமையானது என்றார்.வரி செலுத்துவோர் பழைய வரி முறையை விரும்பினால் வீட்டு வாடகை கொடுப்பதற்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் புதிய வரிமுறையில் இந்த விலக்கு கிடைக்காது.

வாடகை ரசீது இதில் சேர்க்கப்பட வேண்டும். மேலும் வீட்டு உரிமையாளரின் பெயர், வாடகை தொகை, பணம் செலுத்தும் தேதி மற்றும் முகவரி ஆகியவை இருக்க வேண்டும் என அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New income tax rate It will come into effect from April 1


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->