லண்டன் செல்லும் அண்ணாமலை - அடுத்த தமிழக பாஜக தலைவர் யார் ? - ஆலோசனையில் டெல்லி தலைமை..!! - Seithipunal
Seithipunal



தற்போது தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை சர்வதேச அரசியல் குறித்துப் படிப்பதற்காக அடுத்த மாதம் லண்டன் செல்ல உள்ளார். இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தற்போது தமிழக பாஜக தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர் கடந்த 2021ம் ஆண்டில் இருந்து தமிழக பாஜக தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது. கரூர் மாவட்டத்தில் உள்ள தொட்டம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை, கடந்த 2011ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி IPS அதிகாரியாக பணியாற்றியுள்ளார். 

இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு தனது IPS பணியை ராஜினாமா செய்த அண்ணாமலை, பாஜகவில் இணைந்து, 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலில் போட்டியிட்டார். இதையடுத்து முன்னாள் பாஜக தலைவர் எல். முருகன் மத்திய அமைச்சரான பிறகு, அண்ணாமலை தமிழக பாஜக தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 

இந்நிலையில் தற்போது அண்ணாமலை சர்வதேச அரசியல் குறித்து படிப்பதற்காக அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 28ம் தேதி லண்டன் செல்லவுள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் தமிழகம் திரும்ப 6 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. எனவே தமிழக பாஜகவை வழிநடத்தப் போவது யார் என்று டெல்லி தலைமையுடன் ஆலோசிக்க தமிழக  பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் டெல்லி சென்றுள்ளார். 

மேலும் இந்த ஆலோசனையில் நிரந்தர புதிய தலைவரை நியமிக்கலாமா அல்லது அண்ணாமலை திரும்பி வரும் வரை மட்டும் யாரையாவது நியமிக்கலாமா என்று விவாதித்ததாகத் தெரிய வந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Leader Selection in TN BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->