புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறக்க கூடாது - உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்!
New Parliament Building open issue SC Case
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் ஜெய் சுகேன் என்பவர் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அவரின் அந்த மனுவில், இந்திய அரசியல் சாசன சட்டப்பிரின் கீழ், ஒரு நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளையும் கூட்டுவதற்கு அல்லது அந்தக் கூட்டத்தை ரத்து செய்வதற்கும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இருக்கின்றது.
மேலும், மத்திய அமைச்சரவை மற்றும் அதற்கு தலைமை வகிக்கக்கூடிய பிரதமர் குடியரசுத் தலைவரின் கட்டுப்பாட்டிற்குள் வரக்கூடியவர்கள்.
சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் இயற்றப்படக்கூடிய சட்டமும், அவசர சட்டமும் என எதுவாக இருந்தாலும் அது குடியரசுத் தலைவரின் பெயரில்தான் வெளிவருகிறது.
எனவே, நாடாளுமன்றத்தை இயக்கக்கூடிய மிக முக்கிய நபராக இருக்க கூடிய குடியரசுத் தலைவர் தான் புதிய நாடாளுமன்றத்தை திறக்க வேண்டும் என்று, வலியுறுத்தி இந்த ரிட் மனுவை உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ளார்.
மேலும், இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
வருகின்ற 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். அப்போது, இந்திய சுதந்திரத்தின் அடையாளமாக உள்ள, சோழ சாம்ராஜ்யத்தின் அதிகார பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட செங்கோல், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
New Parliament Building open issue SC Case