ஆம்ஸ்ட்ராங் கொலையில் அடுத்த நகர்வு!...கொலையாளிகளின் சொத்துக்களை முடக்க அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவ வழக்கில் முதல் கட்டமாக, மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்பு டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.  இதுவரை  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 28 பேர் கைது செய்யபட்டு உள்ளனர்.

இதற்கிடையே, 'பி.என்.எஸ்.107' சட்ட பிரிவின் கீழ் கொலையாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், சென்னை மாநகர போலீசார் கொலையாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளனர்.

முதல் நடவடிக்கையாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கொலையாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Next move in armstrong murder a move to freeze the killers assets


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->