என்ஐஏ சோதனை : தமிழக இஸ்லாமிய அமைப்புகள் எடுத்த திடீர் முடிவு! - Seithipunal
Seithipunal


என்ஐஏ சோதனை நடைபெறுவதை கண்டித்து ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்த உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளனர்.

தேசியப் புலனாய்வு முகமையும் (NIA), அமலாக்கத் துறையும் (ED) இணைந்து கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, டெல்லி உள்ளிட்ட 15 மாநிலங்களில், 93 இடங்களில் சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில் 45-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 3 போரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து, முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்ததது.

மேலும், "பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அலுவலகங்கள்,நிர்வாகிகள் இல்லங்களில் நடைபெற்ற என்ஐஏ சோதனை அத்துமீறி நடைபெற்றுள்ளது. மதுரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகி வீட்டின் உள்ளே நுழையும் போதே என்ஐஏ அதிகாரிகள் பணக்கட்டுடன் உள்ளே சென்றுள்ளார்கள். 

இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். சிறுபான்மையினரை மிரட்டும் விதமாக என்ஐஏ நடந்து கொண்டுள்ளது எங்களை வருத்தம் அடையச் செய்துள்ளது.

இது சர்வாதிகார நாடா? இல்லை இது ஜனநாயக நாடா? தீவிரவாதத்திற்கு பயிற்சி மற்றும் பணம் அளித்துள்ளதாக கூறும் குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

இந்த சோதனைகளுக்கு ஜனநாயக ரீதியிலும், சட்டப் போராட்டத்திலும் இனி நாங்கள் நடவடிக்கை எடுக்க உள்ளோம். தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் பெட்ரோல் குண்டு வெடிப்பு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை சையது கடுமையான நடவடிக்கையை எடுக்கவேண்டும்" என்று தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIA Raid Issue Islam committee press meet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->