#திருவண்ணாமலை || பேங்க்ல வேலை., ஊராட்சிமன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்த நிலவழகி பொய்யாமொழி.!
nilazhaki poiyamozhi resign
திருவண்ணாமலை அருகே வங்கிப் பணியில் வேலை கிடைத்ததால், பொறியியல் பட்டதாரியான ஊராட்சிமன்ற தலைவர். தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேல் வில்வராயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக பொறியியல் பட்டதாரி நிலவழகி பொய்யாமொழி இருந்து வந்தார்.
தற்போது அவருக்கு சென்னையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணி கிடைத்துள்ளது. இதன் காரணமாக ஊராட்சிமன்ற தலைவர் பதவியை நிலவழகி பொய்யாமொழி ராஜினாமா செய்து உள்ளார்.
மேலும் தனது ராஜினாமா கடிதத்தை கலசப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜுலுவிடம் நிலவழகி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், எனது பணியை தொடர்ந்து கிராம மக்களுக்கு செய்து வருவேன். இருப்பினும் நான் பொறியியல் படித்து உள்ளதால், எனக்கு சென்னையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணி கிடைத்துள்ளது.
எனவே எனது ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்து உள்ளேன். நான் மக்கள் சேவை பணியை செய்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
தற்போது என்னுடைய சூழ்நிலை காரணமாக எனது ஊராட்சிமன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்வது மிகவும் வருத்தமாக உள்ளது என்று, நிலவழகி பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை நிலவழகி பொய்யாமொழி வழங்கும்போது, ஒன்றிய குழுத்தலைவர் அன்பரசி ராஜசேகரன் உடனிருந்தார்.
English Summary
nilazhaki poiyamozhi resign