சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்.? நிர்மலா சீதாராமன் பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான பணத்தின் அளவு குறித்த அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். இந்தியர்கள் ஸ்விஸ் வங்கிகளில் முதலீடு செய்த பணம் குறித்து கேள்வி எழுப்பப் பட்ட நிலையில் அதற்கு மக்களவையில் நிர்மலா சீதாராமன் இவ்வாறு பதில் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து நிர்மலா சீதாராமன் பேசியபோது, " இந்தியாவின் குடிமக்களாக இருப்பவர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்த பணத்திற்கான அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவுமே இல்லை. ஆனால் 2020 ஆம் வருடத்தை விட 2021-ல் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் நிதி அதிகரித்திருப்பதாக சில ஊடகங்கள் கூறியுள்ளன.

மேலும் சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் முதலீடு செய்வதாக கூறப்படும் பணம் கருப்புப் பணம் என்று எந்த இடத்திலுமே குறிப்பிடப்படவில்லை. கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 378 வழக்குகளை ஆராய்ந்ததில் இது வரை குறிப்பிட்ட நபர்களிடம் இருந்து ரூ.14, 820 கோடி வரி விதிப்பு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nirmala seetharaman about Swizz bank black money


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->