காங்கிரஸ் தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் வக்கீல் நோட்டீஸ்.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைவரும் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கடற்கரை காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜனை கார்கே மற்றும் ஜெயராம் ரமேஷுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் நிதின் கரி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கிராமங்களில் வளர்ச்சி என்பது இல்லை எனக் கூறி அவர் தனது கவலையை பகிர்ந்து இருந்தார். 

மேலும் மோடி தலைமையிலான மத்திய அரசு கிராம மக்களையும் மேம்படுத்தும் உழைப்பில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. 

அந்த வீடியோவில் நித்தின் கறி பேசிய காமங்கள் வளர்ச்சி அடையவில்லை என்ற பகுதி மட்டும் பகிரப்பட்டு மோடி கிராமங்களில் மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருவதாக கூறியது நீக்கப்பட்டிருந்தது.

இதனையில் நிதின் கட்காரி காங்கிரஸ் தலைவர்களுக்கான புதிய நோட்டீஸில் காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு 19 வினாடிகள் கொண்ட வீடியோவை மட்டும் பகிர்ந்து மற்றவற்றை மறைத்து விட்டனர். இது பொதுமக்கள் பார்வையில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த வீடியோ நிதின் கட்கரியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் பரப்பப்பட்டுள்ளது. பாஜகவில் தலைவர்களிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள்.

எனவே இந்த வக்கீல் நோட்டீஸ் கிடைத்த மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nitin gadkari send legal notice to Congress leaders


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->