உக்ரைன், ரஷ்யா போர் நிறுத்தத்துக்கு ஜெலன்ஸ்கி அவசியமில்லை; மீண்டும் சாடிய டிரம்ப்..!
Zelensky is not necessary for the Ukraine Russia ceasefire Trump
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 03 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
இது தொடர்பாக, ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் தொலைப்பேசியில் அவர் கலந்துரையாடினார். அத்துடன், சவுதி அரேபியாவில் அமெரிக்கா, ரஷியாவின் உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கவில்லை.
அமெரிக்காவின் முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வந்தார், ஆனால், அந்த நிலைப்பாட்டிலிருந்து டிரம்ப் விலகி வருகிறார். இதன் காரணமாக டிரம்பை ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து ஜெலன்ஸ்கியை சர்வாதி என டிரம்ப் பதிலுக்கு விமர்சித்தார். இந்த நிலையில் ஜெலன்ஸ்கியை டிரம்ப் மீண்டும் சாடியுள்ளார்.
இது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் கூறியதாவது, ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தை நன்றாக இருந்தது. ஆனால், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி இருப்பது அவசியமில்லை என்று கருதுகிறேன் என்று குறிப்பிட்டார். அத்துடன், அவர் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பேச்சு வார்த்தையில் கடுமை காட்டி வருகிறார். இதனால் நான் நடத்தும் பேச்சுவார்த்தைகளில் ஜெலன்ஸ்கியோ வேறு உக்ரைன் அதிகாரிகளோ இடம்பெற வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.

ஆனால், போரை முடிவுக்குக் கொண்டு வர புதினும், ஜெலன்ஸ்கியும் நேரடியாக சந்தித்துப் பேச வேண்டும். ஜெலன்ஸ்கியின் பிடிவாதப் போக்கை இனியும் தொடரவிடப்போவதில்லை. உக்ரைன் எல்லா வகையிலும் ஒரு துணிச்சலான தேசம் என்பதையும் பதிவு செய்கிறேன். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர புதின் விரும்புகிறார். அவர் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார் என்று அவர் மேல் குறிப்பிட்டார்.
அத்துடன், உக்ரைனுக்கான ஆதரவு நிலையில் டிரம்ப் விலகி செல்வதையடுத்து ஐரோப்பா தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தி இருந்தனர். இது தொடர்பாக டிரம்ப் கூறும்போது, உக்ரைன் போரை நிறுத்த இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும், பிரான்ஸ் அதிபர் மெக்ரானும் எதுவும் செய்யவில்லை என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில், இந்த இரு தலைவர்களும் அடுத்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Zelensky is not necessary for the Ukraine Russia ceasefire Trump