#JUSTIN : மாநகராட்சி அதிகாரிகளை தாக்கிய திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க- ஓபிஎஸ் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


திமுகவில் 2006 முதல் 2011 வரை தமிழக மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கேபிபி சாமி. இவர் உடல்நலக்குறைவால் கடந்த 2020 ஆம் ஆண்டு கேபிபி சாமி உயிரிழந்தார்.

பின்னர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கேபிபி சாமியின் சகோதரரான கேபி சங்கருக்கு முதல்முறையாக திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. கடும் போட்டிக்கு இடையே பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தற்போது அப்பகுதியில் தொடர்ந்து ரவுடிசம் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக கே பி சங்கர் புகார்கள் வந்துள்ளது. கே பி சங்கரின் செயல்பாடுகள் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, திமுக எம்எல்ஏ கேபி சங்கர் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக அறிக்கையில், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கேபி சங்கர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால், திருவொற்றியூர் மேற்கு பகுதி கழக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ. கே பி சங்கரை கைது செய்யக்கோரி, ட்விட்டர் பக்கத்தில் #Arrest_MLAShankar என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்த ஹேஷ்டேக்கில் எம்.எல்.ஏ. கே பி சங்கரை கைது வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகளை தாக்கிய திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு ஒப்பந்தங்களில் தலையிடுவது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

O panneerselvam force to arrest DMK MLA sankar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->