சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியாது என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு!  - Seithipunal
Seithipunal



இந்தியாவில் சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுக்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், மத்திய அரசு தரப்பில் அதற்க்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லி வருகிறது.

இந்நிலையில், பிகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்திருந்தார். 

இந்த நிலையில், ஓபிசி (OBC) மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மத்திய அரசுக்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  "ஓபிசி பிரிவில் உள்ள சாதிகளின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்பது, மத்திய அரசின் கொள்கை முடிவு" என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, ஓபிசி பிரிவின் அடிப்படையிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என எவ்வாறு கூறுகிறீர்கள்? மக்களின் நல்லனுக்காக மத்திய அரசின் கொள்கை முடிவை மாற்றி அமைக்கலாமே" என்று கேள்வி எழுப்பினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OBC census Case HC


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->