எனக்குப் பிறகு யார் என்று ஒடிசா மக்கள் தான் முடிவு செய்வர் - ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்! - Seithipunal
Seithipunal


ஒடிசாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் பிஜு ஜனதாதள கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் வி. கே. பாண்டியன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், ஒடிசாவில் IAS அதிகாரியாக இருந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக பிஜு ஜனதாதள கட்சியில் சேர்ந்து முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலதுகையாக உள்ளார்.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் வி. கே. பாண்டியனைக் குறிவைத்து பாஜக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆளவேண்டுமா என்ற ரீதியில் பிரச்சாரம் செய்து வந்தது. அதாவது முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு பிறகு பாண்டியன் தான் அக்கட்சிக்கு தலைமை வகிப்பார் என்று பாஜக கூறி வருகிறது.

இதுகுறித்து விளக்கமளித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் "வி. கே. பாண்டியனை எனது அரசியல் வாரிசு என்று கூறுகின்றனர். இதுகுறித்து நான் பலமுறை விளக்கமளித்துள்ளேன். இது ஆதாரமில்லாத பேச்சு. பாஜகவிற்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதால், அக்கட்சியினர் இப்படி பேசுகிறார்கள்.

உண்மையில் எனக்குப்பிறகு யார் என்பதை ஒடிசா மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த முறை பிஜு ஜனதாதளம் வெற்றி பெற்றாலும் நான் தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒடிசா முதல்வராக இருப்பேன். நான் கடந்த 27 ஆண்டுகளாக சிறப்பாக இந்த கட்சியை வழிநடத்தி வருகிறேன். தொடர்ந்து இதேபோல் செயல்படுவேன்" என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisa Peoples Only will Decide Who Will Be Here After Me Says Naveen Patnaik


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->