ஒமிக்ரான் வைரஸ் இப்படித்தான், இதன் மூலம் தான் பரவியது.! வெளியான பரபரப்பு செய்தி.!  - Seithipunal
Seithipunal



மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் 2-வது மற்றும் 3-வது கொரோனா அலையை, ஒமிக்ரான் மற்றும் டெல்டா வகை வைரஸ் என்று குறிப்பிட்டனர். மேலும், இது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வந்தனர். 

இதில், பெங்களூருவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் 878 கழிவு நீர் ஓடைகளில் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தனர். அதன் முடிவில் ஒமிக்ரான் வகை வைரஸ் கழிவு நீர் மூலம் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. 

இதில், பிஏ 2-10 வகை வைரஸ் 14.83 சதவீதம் அளவிற்கும், பிஏ 2 வகை வைரஸ் 10.49 சதவீதம் அளவிற்கும், பி.1-1529 வகை வைரஸ் 5.1 சதவீதம் அளவிற்கும் இருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதாவது, 

"கடந்த ஜனவரி மாதம் பிஏ 2-12 வகை வைரசின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதுவே கடந்த மே மாதம் பிஏ 2-வகை வைரசின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த காலகட்டத்தில் 7 வகையான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன". என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Omicron virus was discovered spread


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->