எதிர்கட்சிகளால் மேற்கு வங்கத்தில் ரத்தம் வழிகிறது - யோகி ஆதித்யநாத் - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் 7கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்தவகையில், ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட வாக்குபதிவும் ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம்கட்ட வாக்கு பதிவு நடைபெற்று முடிந்தநிலையில், மூன்றாம்கட்ட மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகியுள்ளது. அனைத்துகட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில்  யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தில் பேசுகையில்,மேற்கு வங்காள மாநில அரசுடன் கைகோர்த்து ஊழல் மற்றும் மாபியா கும்பல்கள் பொதுமக்களிடம் சுரண்டலில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் , திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளால் மேற்கு வங்கத்தில் ரத்தம் வழிந்து ஓடுகிறது.

மேற்கு வங்கத்தில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. உத்தரபிரதேசம் 7 அண்டுகளில் அமைதி மாநிலமாக மாறியுள்ளது. எதிர்க்கட்சிகள் தேர்தல் வாக்குறுதியில்  கூறப்பட்டுள்ள முஸ்லீம் இடஒதிக்கீடு நாடு பிரிவினைக்கு வழிவகுக்கும் . மத அடிப்படையில் வழங்கப்படும் இடஒதிக்கீட்டை மக்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Opposition parties are bleeding West Bengal Yogi Adityanath


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->