கர்நாடக சட்டசபையில் பரபரப்பு; சபாநாயகர் மீது காகிதங்களை கிழித்து எரிந்து வீசி எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்..!
Opposition parties in the Karnataka Assembly protested by tearing and burning papers against the Speaker
கர்நாடகா சட்டசபையில் இன்று பரபரப்பான சூழல் நிலவியுள்ளது. பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அம்மாநில பட்ஜெட் கடந்த 07-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து எதிர்க்கட்சியான பா.ஜ., உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 21) பொதுப்பணி ஒப்பந்தத்தில் சிறுபான்மையினருக்கு 04 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் ஒப்புதலுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர்.

அத்துடன், அரசியல் தலைவர்களை 'ஹனி டிராப்' மூலம் சிக்க வைப்பதாக கூறி, சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கை முன் கூடி, காகிதங்களை கிழித்தும், தூக்கி எறிந்தும் கடும் அமளி துமளியில் ஈடுபட்டனர். இதன் காரண்மாக அங்கு பரபரப்பு நிலவியதால் அவை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Opposition parties in the Karnataka Assembly protested by tearing and burning papers against the Speaker