தேனி எம்பி பதவிக்கு வைக்கப்பட்ட ஆப்பு.! உச்ச நீதிமன்றத்தை நாடிய ஓ.பி.எஸ் மகன்.!!
OPR appeal against Madras High Court verdict
தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக ரவீந்திரநாத் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டபோது தாக்கல் செய்த ஆவணங்களை திருத்தியும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும் தேர்தலில் வெற்றி பெற்றதாக தேனியைச் சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்கி தீர்ப்பை நிறுத்தி வைப்பதாகவும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் கூடிய விரைவில் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
OPR appeal against Madras High Court verdict